தொடர்புடைய செய்திகள்
- ஆப்ரிக்க பெண்ணை மணந்த தமிழர்
- வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: 300 ரன்களை தாண்டியது தென்னாப்பிரிக்கா!
- ஓய்வு குறித்த கேள்வி: திகைத்து போன மிதாலி ராஜ்!
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா!
- மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா!
மீண்டும் கிளம்பியது எபோலா வைரஸ்! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!
கொரோனா பாதிப்பிலிருந்தே உலகம் முழுவதும் மீளாத நிலையில் மீண்டும் எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு முன்னர் மக்களை உலுக்கிய மோசமான வைரஸ் தொற்றுகளில் முக்கியமானது எபோலா வைரஸ். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் கடந்த சில ஆண்டுகளில் பல உயிர்களை பலி கொண்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட எபோலா காய்ச்சலால் 2,300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் எபோலா வைரஸ் காங்கோவின் வடமேற்கு பகுதியில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அருகே உள்ள தான்சானியா நாட்டில் எபோலாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் இன்னும் மீளாத சூழலில் மீண்டும் எபோலா பரவல் தீவிரமடைவது ஆப்பிரிக்க நாடுகளை மட்டுமன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
