திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 மார்ச் 2022 (10:34 IST)

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா!
கடந்த சில நாட்களாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா 76 ரன்களும் கேப்டன் மிதாலி ராஜ் 67 ரன்களும் எடுத்தனர் 
 
 இந்த நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் 275 என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க மகளிர் அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் இந்தியா தற்போது 5வது இடத்தில் இருப்பதால் இந்த போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது