1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump warning to iran again

பல கோடி நஷ்டம்!.. ஒத்துவரலான மீண்டும் அட்டாக்!.. ஈரானுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்..

donald
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி பிப்ரவரி 28ம் தேதி ஈரான் நாட்டின் மீது தாக்குதலை துவங்கியது. போர் துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் இரண்டு வாரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதேநேரம் போர் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. சமீபத்தில் பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பேச்சுவார்த்த நடத்தப்பட்டது. ஆனால் ஈரான் அனு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது..

ஒருபக்கம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் ஈரானின் கடல் வழி பாதையான ஹார்மூஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. ஆனால், போர் காரணமாக ஈரான் அந்த பாதையை மூடிவிட்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டதால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அதேநேரம், சில நாட்களுக்கு முன்பு ஹார்மூஸ் வழிப்பாதை திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்தது. ஆனால் ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா போர்க்கப்பலுடன் சென்றதால் கோபமடைந்த ஈரான் மீண்டும் ஹார்மூஸை மூடிவிட்டது. அதோடு அந்த பாதையாக வரும் சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது..

இந்நிலையில் செய்தியாளிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஆனால் டொனால்ட் டிரம்ப் ‘ஹார்மூஸ் நீரிணை வழியாக சென்ற கப்பல்களை ஈரான் தாக்கியது போர் நடத்த விதிமுறைகளுக்கு எதிரானது. ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முடக்கியதால் ஈரானுக்கு தினமும் 500 மில்லியன் டாலர் இறப்பு ஏற்படும். ஈரானுடன் போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் ஈரானில் உள்ள அனைத்து பாலங்களும், மின் நிலையங்களும் தகர்க்கப்படும்’ என அவர் மிரட்டியுள்ளார். ஏற்கனவே பலமுறை டிரம்ப் இப்படி மிரட்டியும் ஈரான் அணி படியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!... இதுதான் காரணமா?..