1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump anwer about north korea

வட கொரியா மட்டும் அணு ஆயுதம் வச்சிக்கலாமா?!.. டொனால்ட் டிரம்ப் ரியாக்‌ஷன் இதுதான்...

donald
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை துவங்கின. ஆனால் தற்போது வரை போர் நின்ற பாடில்லை.  அமெரிக்காவின் மிரட்டலை ஈரானும் ஏற்கவில்லை. இந்த போரில் அமெரிக்கா பல ஆயிரம் கோடிகளை செலவு செய்துவிட்டது.

ஒருபக்கம் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் அமெரிக்கா அந்த நாட்டின் மீது எந்த போரையும் தொடங்கவில்லை. இந்நிலையில் ‘ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றால் வடகொரியா மட்டும் வைத்திருக்கலாமா?’ என அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்..

இதற்கு பதில் சொன்ன டிரம்ப் ‘ வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் எனது நண்பர்.. அவருக்கு உலகத்திலேயே பிடித்த ஒரே நபர்    நான் மட்டும்தான். வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை கையாளும் திறன் இருந்தாலும் அமெரிக்காவை விட பெரிய அணு ஆயுதத்திறன் அவர்களிடம் இல்லை.. வடகொரியாவின் அணு ஆயுத சேமிப்பை எனக்கு முன்பிருந்த அமெரிக்க அதிபர்கள் யாரும் தடுக்கவில்லை.. கிம் என்னை மிகவும் மதிப்பதால் நான் இருக்கும் வரை அவர் நன்றாக இருப்பார்’ என டிரம்ப் ஜாலியாக பதிலளித்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தாராபுரத்தில் விஜய்!.. இடம் பிடிக்க முண்டியடித்து ஓடும் தவெகவினர்!.. போலீசார் திணறல்!..