1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump said they will destroy iron

பெட்ரோல் விலை ஏறினாலும் ஈரானை அழிப்போம்!.. அடங்காத டொனால்ட் டிரம்ப்!...

donald
ஈராக் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது என இஸ்ரேலும், அமெரிக்காவும் சொல்லி வந்தது. ஆனால் ஈரான் அரசு அதைக் கேட்கவில்லை.. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.. எனவே ஒரு வாரத்திற்கு முன்பு ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் க்குதல் நடத்தியது. ஒருகட்டத்தில் அது போராக மாறிவிட்டது.

ஈரானின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.. அதேபோல் அமெரிக்க ராணுவத்தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரன் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே சமையல் சிலிண்டர் விலை 60 அதிகரித்துவிட்டது.. விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும் என மக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்..

இந்நிலையில் செய்தியாளிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘பூமித்தாயின் முகத்தில் இருந்த புற்றுநோயை அகற்றி விட்டோம்.. ஈரான் ராணுவத்தை கிட்டத்தட்ட அழித்து விட்டோம்.. ஈரானின் 70 சதவீத ஏவுகணைகளை அழித்துவிட்டோம்.. கடற்படையின் 44 போர் கப்பல்களை மூழ்கடித்து விட்டோம்.. ஈரானில் இதுவரை தாக்குதல் நடத்தாத பகுதிகளில் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்..

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்திருக்கிறது.. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெட்ரோல் விலை உயர்வு ஏற்பட்டாலும் ஈரனை அழிப்பதே எங்கள் இலக்கு.. ஏற்கனவே பல தலைவர்களை ஈரான் இழந்துள்ளது.. அடுத்தகட்ட தாக்குதலில் மேலும் பலரை அழிப்போம்.. ஈரானை ரஷ்யா ஆதரிப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை’ என அவர் கூறியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சக மாணவனை இரும்புக்கம்பியால் தாக்கி கொலை.. கர்நாடக சர்வதேச பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்..!