நீ ஒரு முட்டாள்!.. பேட்டியில் தொகுப்பாளரை திட்டிவிட்டு வெளியேறிய டிரம்ப்!...
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னால் பல அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக உலகெங்கிலும் கச்சா எண்ணெய் கணிசமாக உயர்ந்து சமையல் சிலிண்டர் வணிக சிலிண்டர் பெட்ரோல் டீசல் போன்றவர்களை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
ஒருபக்கம் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அமைதி பேச்சுவதை ஏற்பட்டு தற்போது போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கிறது. அதேநேரம் ஈரானின் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் நேற்று இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. எனவே மீண்டும் இஸ்ரேல் - ஈரான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை விரும்பவில்லை.
ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுவரும் நிலையில் நீங்கள் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனாலும், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு அதை ஏற்கவில்லை. இந்நிலையில்தான் ஒரு பேட்டியில் NBC NEWS தொகுப்பாளரை முட்டாள் என கூறி மைக்கை பிடிங்கிவிட்டு நேர்காணலில் இருந்து பாதியில் வெளியேறியிருக்கிறார்
2020ம் வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வழங்குமாறு தொகுப்பாளர் வற்புறுத்தியதால் கோபமடைந்த டிரம்ப் நேர்காணலை பாதியிலேயே முடித்துக் கொண்டார்..
