1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 ஜூன் 2018 (11:00 IST)

டான்ஸ் ஆடிக்கொண்டே ஆபரேஷன் செய்த டாக்டர் - 100 பெண்களுக்கு மேல் புகார்

அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் கவனக்குறைவாக  ஆடிப்பாடியபடியே ஆபரேஷன் செய்ததாக பாதிக்கப்பட்டதாக சுமார் 100 பெண்கள் புகார் கூறியுள்ளனர். 
அமெரிக்காவை சேர்ந்தவர் விண்டெல் பூட்டே. இவர் அங்குள்ள மருத்துவமனையில் தோல் நோய் மற்றும் முக அழகு சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யும் போது பாட்டுப்போட்டு ஆடிப்பாடி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதனை மயக்க நிலையில் உள்ள நோயாளிகள் அறிவதற்கு வாய்ப்பில்லை. 
 
தனது சேட்டையை அந்த மருத்துவர் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப்பார்த்து அவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நோயாளிகள் 100 பேர் அதிர்ச்சியடைந்து, அந்த மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.