படித்தது பிளஸ்-2 - பார்த்தது டாக்டர் வேலை

doctor
Last Modified சனி, 5 மே 2018 (11:13 IST)
திருப்பூரில் பிளஸ்-2 படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
டாக்டருக்கு படிப்பதற்காக பலர் கஷ்டப்பட்டும் வேளையில் வெறும் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு திருப்பூரில் ஒருவர் க்ளினிக் நடத்தி வந்துள்ளார்.
 
திருப்பூர் கரியாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (32). இவர் அதே பகுதியில் சிவன்மலை என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தார். அவர் போலி மருத்துவர் என்ற புகார் எழுந்த நிலையில், திருப்பூர் கிளை நிர்வாகிகள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில், கிளினிக்கில் ஆய்வு நடத்தினர்.
 
விசாரணையில் ஆனந்த் பிளஸ்-2 வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.  இதனைத்தொடர்ந்து போலி டாக்டர் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :