1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (07:33 IST)

பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி காலமானார்

பிரபல பட்டிமன்ற நடுவரும், இலக்கிய சொற்பொழிவாளரும், தமிழ் ஆர்வலருமான அறிவொளி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 80. 
 
திருச்சியை சேர்ந்த அறிவொளி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. மறைந்த அறிவொளி அவர்களுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
டென்மார்க் நாட்டில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற அறிவொளி அவர்கள் உலக நாடுகளுக்கு தனது மருத்துவத்தை கொண்டு சென்றவர். தமிழ் மருந்து மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று கூறியவர். அண்ணாமலை பல்கலை மற்றும் பூம்புகார் கல்லூரியில் பேராசிர்யராக பணிபுரிந்த இவர் தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில்கள் மற்றும் சிறப்பு, வரலாறு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அதுகுறித்து பல நூல்களை எழுதியுள்ளார். 
 
உலகில் எங்குமே இல்லாத பட்டிமன்றம் என்ற ஒன்றை கடந்த 1986ஆம் ஆண்டு அறிமுகம் செய்தவர் அறிவொளி அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.