திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 ஜூன் 2018 (09:01 IST)

மன அழுத்தத்தால் மருத்துவர் தற்கொலை

மும்பையில் மன அழுத்ததால் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் ராஜூ. மருத்துவரான இவர் மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு வேலை பளு அதிகமாக இருந்துள்ளது.
 
இதனை சமாளிக்க முடியாத அவர், தீவிர மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்ய திட்டமிட்டு மயக்க மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மருத்துவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். 
 
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கு வேறேதும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.