சவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறு மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. 2 பேர் பலி...
சவூதி அரேபியாவில் உள்ள ஷாய்பா எண்ணெய் ஆலையின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இந்தியர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தலா ஒருவர் காயமடைந்தனர்.
யேமனை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயினும், இந்த தாக்குதலால் எண்ணெய் ஆலையின் இயல்பு பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சவூதி எரிசக்தி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேபோல், தம்மாம் நகரில் உள்ள கிங் பஹ்த் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். சவூதி அரேபியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களையும் கருத்தில் கொண்டு, அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிகளின் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு வலயத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

