1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Coronavirus virus Chinas death toll rises

கொரோனோ வைரஸ் தாக்குதல் ... சீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு !

சீனா
கொரோனோ வைரஸ் தாக்குதல் சீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு
சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கொரோனோ வைரஸ் தாக்குதலால் நேற்று சுமார் 80 மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதால் ஒட்டுமொத்தமாக அங்கு பலியானோரின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.
 
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனோ வைரஸ்,அந்நாட்டில் அதிக அளவில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வருகிறது.  
 
சீனாவில் கொரோனோ வைரஸால் தற்போது வரை சுமார் 723 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
மேலும், அந்நாட்டில் மொத்தம் 2147 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அடுத்த கட்டுரையில்
கிரிக்கெட் விளையாடிய முதல்வர் பழனிசாமி ...