வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (15:40 IST)

போராடித் தோற்ற இந்தியா – தொடரை வென்ற நியுசிலாந்து !

ரவிந்தர ஜடேஜா

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். அதில் நியுசிலாந்தின் குப்தில் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரின் அரைசதத்தால் 273 ரன்களை சேர்த்தது. இந்தியா சார்பில் சஹால் 3 விக்கெட்களும், தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

அதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் பிருத்வி ஷா, மயங்க், கோலி, ராகுல் ஆகியோர் நிலைக்காமல் அவுட் ஆனதால் இந்தியா 71 ரன்களுக்கே 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று அரைசதம் அடித்து சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதன் பின் வந்தவர்கள் வரிசையாக் பெவிலியன் திரும்ப ஜடேஜா சைனியோடு ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி சரிவில் இருந்து மீட்டார். இந்த ஜோடி 8 ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. 45 ரன்கள் சேர்த்த சைனி அவுட் ஆனதும் நம்பிக்கை தகர்ந்து போனது. அதன் பின்னர் வந்த சஹால் 10 ரன்களில் வெளியேறினார்.

சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதம் அடித்தார். இதற்கிடையில்  48 ஆவது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. டி 20 தொடரை இழந்த நியுசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையில் உள்ளது.