ராஸ் டெய்லரால் தப்பித்த நியுசிலாந்து – இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு !

ராஸ் டெய்லெர்
Last Modified சனி, 8 பிப்ரவரி 2020 (11:16 IST)
ராஸ் டெய்லெர்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

அதையடுத்துக் களமிறங்கிய நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் மற்றும் நிக்கோல்ஸ் முறையே 79 மற்றும் 41 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் சொதப்ப நியுசிசிலாந்து ஒரு கட்டத்தில் 191 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அந்த அணியின் ராஸ் டெய்லர் 9 ஆவது விக்கெட்டுக்கு ஜேமிஸன் என்பவரோடு சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த டெய்லர் 73 ரன்களும் ஜேமிஸன் 25 ரன்களும் சேர்த்தனர். இதனால் நியுசிலாந்து அணி 273 ரன்களை சேர்த்து கௌரவமான ஸ்கோரை எட்டியது.

இந்தியா சார்பில் சஹால் 3 விக்கெட்களும், தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :