வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (09:02 IST)

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

சிங்கப்பூரில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளதாகவும் இன்னும் நான்கு வாரங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட அனைவரும் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 மே முதல் வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் ஒவ்வொரு நாளும் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு அல்லது நான்கு வாரங்களில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தி உள்ளது.

Edited by Siva