திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:18 IST)

இந்தியாவுக்கு வெளியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சிங்கப்பூர் சலூன்… தேதி அறிவிப்பு!

ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குனர் கோகுல் இயக்கியிருந்தார். ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் அவர் சலூன் கடை வைத்து முன்னேறத் துடிக்கும் இளைஞராக ஆர் ஜே பாலாஜி நடித்திருந்தார். பல மாத தாமதங்களுக்கு பிறகு இந்த திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

ஆனால் ரிலீஸுக்கு பிறகு மோசமான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் வசூலிலும் ஜொலிக்கவில்லை. ஆனாலும் இந்த படத்தின் சக்ஸஸ் மீட் நடத்தி கொண்டாடினர் படக்குழுவினர். ஆர் ஜே பாலாஜி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் ரசிகர்களுக்கு ஒரு க்ளிஷே உணர்வு ஏற்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படம் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் டெண்ட் கொட்டா என்ற தளத்தில் இந்தியாவுக்கு வெளியில் மட்டும் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.