முக்கியக் காட்சிகளை படமாக்க சிங்கப்பூர் செல்லும் விக்னேஷ் சிவனின் எல் ஐ சி படக்குழு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒள்ப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். இப்போது தமிழகத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துள்ள விக்னேஷ் சிவன் அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்க உள்ளாராம். இதற்காக விரைவில் படக்குழு சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்காக அவர் தாடி வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.