1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. china deploys many fighter jets in indian border

இந்திய எல்லையில் 5வது தலைமுறை ஜெட் விமானங்கள்!. அச்சுறுத்தும் சீனா!..

china india
50 வருடங்களுக்கு மேல் இந்தியாவுக்கு எதிரி நாடாக சீனா இருந்து வருகிறது. என்னதான் இந்திய பிரதமரும், சீன அதிபரும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை பேணிக் கொண்டாலும் சீனா இந்தியாவை தனது எதிரியாகவே பார்க்கிறது.

குறிப்பாக இந்தியாவின் எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்திய எல்லையை ஒட்டி உள்ள தனது விமானப்படையில் சீனா தனது 5வது தலைமுறை போர் விமானங்களை நிறுத்தியுள்ளது.

11 J-20  ரக போர் விமானங்கள் அங்கு நிறுத்தப்பட்டிருப்பது சாட்டிலைட் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தியாவை இலக்காக வைத்து ஒரே நேரத்தில் இவ்வளவு போர் விமானங்கள் குவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்தியாவைப் பொறுத்தவரை 5வது தலைமுறை போர் விமானங்கள் எதுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜய் அலுவலகம் மாறுகிறது.. முக்கிய அலுவலகங்களும் இடமாற்றம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு...!