தொடர்புடைய செய்திகள்
- ஆட்சியை பிடிக்கிறது அதிமுக.. நூலிழையில் ஆட்சியை இழக்கும் திமுக.. விஜய்க்கு வெறும் 6 சீட் தான்..
- காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் வேண்டாம்.. கூட்டணி கதவை அடைத்துவிட்டாரா விஜய்?
- விஜய் கட்சி 200 தொகுதிகளில் ஜெயிக்கும்.. அல்லது பூஜ்யம் ஆகும்.. ஒரு வித்தியாசமான கணிப்பு..!
- தவெக அலுவலகத்தில் குவியும் விருப்ப மனுக்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க பொதுச்செயலாளர் வேண்டுகோள்!
- தனித்து போட்டியிட்டாலும் விஜய் ஆட்சி அமைப்பார்? அரசியல் விமர்சர்கள் கணிப்பு..!
தவெகவின் அதிகாரபூர்வ சேட்டிலைட் சேனல்.. 'வெற்றி தொலைக்காட்சி' ஒளிபரப்பு தேதி!
தமிழக அரசியல் களம் மற்றும் ஊடகத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'தமிழக வெற்றி கழகம்' கட்சியின் அதிகாரப்பூர்வ புதிய தொலைக்காட்சி சேனல் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 'வெற்றி தொலைக்காட்சி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சேனலின் லோகோ மற்றும் பெயர் அறிமுகம் வரும் ஜூன் 22ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 30ஆம் தேதி முதல் இந்த தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக தனது ஒளிபரப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. தமிழக மக்கள் மற்றும் கட்சியின் தொண்டர்களிடம் தங்களின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் முக்கிய ஊடகமாக இது செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சேனல் தொடங்குவதற்காக, முன்பு பிரபலமாக இருந்த 'எஸ் எஸ் மியூசிக்' சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை இந்த நிர்வாகம் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த புதிய சேனலுக்கான அதிநவீன அலுவலகம் மற்றும் ஸ்டுடியோ பணிகள் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவியின் பின்புறம் அமைந்துள்ள ஒரு பெரிய கட்டடத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும், பிரம்மாண்டமாகவும் தயாராகி வருகின்றன. தொழில்நுட்ப பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த புதிய சேனல் தொடக்கம் தமிழக ஊடகத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by siva
