திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (13:24 IST)

ஆன்லைன் வீடியோ கேம்களுக்கு இன்று முதல் தடை – சீனா அதிரடி அறிவிப்பு!

சீனாவில் சிறுவர்கள், இளைஞர்களின் வீடியோ கேம் மோகத்தை கட்டுப்படுத்த சீன அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சீனாவில் பல்வேறு ஆன்லைன் கேம்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் சிறுவர்கள், இளைஞர்கள் தீவிரமாக வீடியோ கேம் மோகத்தில் உள்ளது அவர்களை பாதிக்கும் அபாயம் உள்ளது என பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள சீனா, நாட்டில் செயல்படும் அனைத்து ஆன்லைன் கேம்களும் “வீடியோ கேம் ஆண்டி அடிக்‌ஷன்” கட்டுப்பாட்டை கேமுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் கேம்களை விளையாட வார நாட்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்று கிழமை இரவு வரை மூன்று நாட்களுக்கு அதிகபட்சம் மூன்று மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட அனுமதிக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளால் மாணவர்கள் வீடியோ கேம் மோகம் குறைந்து கல்வி மற்றும் பிற திறன் வளர் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.