1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (12:01 IST)

வெறும் டம்மி... ஆப்கானில் விடப்பட்ட அமெரிக்க போர் உபகரணங்கள்!

அமெரிக்கா தனது போர் ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு வந்தமை குறித்து அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி தகவல். 
 
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேற அமெரிக்கா முடிவு செய்தது. 
 
படிப்படியாக அமெரிக்க ராணுவம் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டுமென தாலிபான்கள் கெடு விதித்தனர். அதன்படி சற்றி முன் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படை முழுமையாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. 
 
ஆனால் அமெரிக்கா தனது போர் ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி கூறியதாவது, காபூலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அங்குள்ள அமெரிக்காவின் 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் ஆகியவற்றை செயலற்றதாக்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.