புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (17:16 IST)

ஹாரி-மேகன் தம்பதியருக்கான பாதுகாப்பு ரத்து.. கனடா அரசு அறிவிப்பு

பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியினருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக ஹாரியும் அவரது மனைவியாகிய மேகனும் அறிவித்ததை தொடர்ந்து, அவ்விருவரும் அரச குடும்பத்திலிருந்து விலகியதை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தற்போது ஹாரி-மேகன் தம்பதியினர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய தம்பதிகளுக்கு கனடா அரசு பணத்திலிருந்து பாதுகாப்பு வழங்க அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே ஹாரி-மேகன் தம்பதிக்கு அளித்த வந்த சிறப்பு பாதுகாப்பை மார்ச் 1 ஆம் தேதியுடன் திரும்ப பெறவுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.