புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:40 IST)

இத்தாலியில் கொரோனாவால் 17 பேர் பலி..

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மட்டுமே 2,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஈரான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றது.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கிட்டதட்ட 600க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது.