செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கொரோனா வைரஸ்
Written By Arun Prasath
Last Updated : புதன், 26 பிப்ரவரி 2020 (20:06 IST)

கொரோனா வைரஸால் பிரான்ஸ் நாட்டில் மேலும் ஒருவர் பலி..

கொரோனா வைரஸால் பிரான்ஸ் நாட்டில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் மட்டுமே 2,700 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதே போல் இத்தாலி நாட்டில் 11 பேரும், ஈரான் நாட்டில் 15 பேரும், தென் கொரியா நாட்டில் 11 பேரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கொரோனா பாதிப்பால் 60 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் பிரான்சில் கொரோனாவால் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் பிரான்சில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.