வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (08:35 IST)

வங்குக்குள் புகுந்த கொள்ளையர்கள் சுட்டுக்கொலை! – வெடிகுண்டு வைத்திருந்ததால் பரபரப்பு!

Canada
கனடாவில் வங்குக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்களை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டிற்கு சொந்தமான வான்கூவர் தீவில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த வங்கி வழக்கம்போல செயல்பட்டு வந்த நிலையில் திடீரென வங்குக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த இருவர் வங்கி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை பிணைய கைதியாக பிடித்தனர்.

உடனே வங்கியை போலீஸார் சுற்றி வளைத்த நிலையில் கொள்ளையர்களுக்கும், போலீஸாருக்குமிடையே துப்பாக்கிச்சூடு சண்டை ஏற்பட்டது. இதில் இரண்டு கொள்ளையர்களுமே சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள்ளையர்கள் வந்த காரை சோதனை செய்தபோது அதில் வெடிக்குண்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.