ஹைதராபாத்தில் நடந்த எண்கவுன்டர் போலியானது! – உச்சநீதிமன்ற குழு அறிக்கை!
ஹைதராபாத்தில் கடந்த 2019ம் ஆண்டில் போலீஸ் நடத்திய எண்கவுண்டர் போலியானது என உச்சநீதிமன்ற குழு அறிக்கை அளித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஹைதராபாத்தில் இளம்பெண் நான்கு பேரால் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் 3 மைனர் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து சென்றபோது தப்பி ஓடியதாக போலீஸ் நடத்திய எண்கவுண்டரில் 4 பேரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த எண்கவுண்டர் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு குழுவை அமைத்தது.
இந்த எண்கவுண்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த குழு, இந்த எண்கவுண்டர் போலியாக சித்தரித்து நடத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பின் இதன் மீதான விசாரணை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.