வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (09:32 IST)

கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை?

கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் உலக அளவில் துப்பாக்கி பயன்பாடு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் துப்பாக்கிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
 
இது போன்ற துயர சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் தனிநபர் கைத்துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் பரிசீலித்து வருகின்றன. அதன்படி கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டம் அமலுக்கு வரும் போது, கைத்துப்பாக்கிகளை வாங்க, விற்க இறக்குமதி செய்ய முடியாது. விளையாட்டு மற்றும் வேட்டைக்கு மட்டும் கைத் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.