புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (11:57 IST)

நம்ம ஏரியாக்குள்ள எங்கிருந்தோ வந்த 250 கோள்கள்! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பூமி உள்ள அண்டத்திற்குள் புதிதாக 250 கோள்கள் நுழைந்துள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நமது பூமி உள்ள அண்டத்தை போலவே சுற்றி 54 அண்டங்களை கொண்ட பால்வெளி மண்டலமாக உள்ளது. இதில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் பற்றி பல வானியல் ஆய்வாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பூமி உள்ள பால்வெளி மண்டலத்திற்குள் சிறியதும், பெரியதுமாக சுமார் 250 கோள்கள், நட்சத்திரங்கள் உள் நுழைந்துள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேல்டெக் என்னும் வானியல் தன்னார்வல ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இந்த பேரண்டத்திற்குள் நுழைந்துள்ள அந்த கோள்கள் சில சூரியனை விடவும் பல மடங்கு பெரியவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட எந்த கிரகத்தின் ஈருப்பு விசையிலும் சுற்றி வராமல் இருப்பதால் இவை இந்த பேரண்டத்திற்கிள் நுழைந்திருப்பதாக கருதப்படுகிறது. அவை எந்த பேரண்டத்தில் உருவாகின, அவற்றின் பாதை ஆகியவற்றை கணிக்க கேல்டெக் அமைப்பினர் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.