1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 ஜூலை 2020 (07:17 IST)

உலக கொரோனா பாதிப்பு 1.21 கோடி: அமெரிக்காவில் ஒரே நாளில் 61 லட்சம்

உலக நாடுகளின் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,55,395 ஆக அதிகரித்ததாகவும், கொரோனா ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 5,51,183 ஆக அதிகரித்ததாகவும் வெளிவந்துள்ள தகவல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,58,724 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,640 என்பதும் அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,34,853 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 17,16,196 ஆக அதிகரித்திருக்கிறது என்பதும் அந்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 41,541 என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்
 
அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,.69,052 என்பதும், கொரோனா மொத்த மரணங்கள் 21,144 என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 25,571 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ஒரே நாளில் 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் 4வது இடத்தில் இருந்த ரஷ்யாவை தென்னாப்பிரிக்கா பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தை பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நேற்று ஒரே நாளில் 8,810 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும், ஒரே நாளில் 100 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர் என்றும், அந்நாட்டின் மொத்த பாதிப்பு 2,24,665 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது