1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Andaman island chain earthquakes

அந்தமான் தீவுகளில் அடுத்தடுத்து 20 நிலநடுக்கங்கள்! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

earthquake
அந்தமான் மற்றும் சுற்றியுள்ள தீவுகளில் பதிவான தொடர் நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தமான் நிகோபார் தீவில் போர்ட்ப்ளேயருக்கு தென்கிழக்கே 244 கி.மீ தொலைவில் அதிகாலை 2.54 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவானது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கும் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

மீண்டும் அதிகாலை 5.57 மணியளவில் போர்ட்ப்ளேர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஒருநாளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்