வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (09:06 IST)

ஈரான், சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! 3 பேர் பலி! – அதிர்ச்சியில் மக்கள்!

earthquake
இன்று அதிகாலை சீனா மற்றும் ஈரானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பலர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இன்று அதிகாலை ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஈரானின் கடற்பகுதி மாகாணமான ஹர்மோஸ்கானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் பல இடிந்து விழுந்த நிலையில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதை தொடர்ந்து சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.