தொடர்புடைய செய்திகள்
- மீன் வரத்து அதிகரிப்பு; மலிவாய் கிடைத்த மீன்கள்! – மகிழ்ச்சியில் மக்கள்!
- கரூரில் அமைச்சர் வருகையால் பொதுமக்கள் பாதிப்பா?
- கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்
- இந்திய அரசு சொன்னால் தமிழர்களுக்கு வேலை! – மலேசிய அமைச்சர்!
- கர்நாடகாவில் திடீர் நிலநடுக்கம்! – அலறியடித்து ஓடிய மக்கள்!
கர்நாடகாவில் திடீர் நிலநடுக்கம்: ஒரே வாரத்தில் 2வது முறை என்பதால் மக்கள் அதிர்ச்சி
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த பகுதியில் 2.3 என ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் கர்நாடக மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்துடன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
