அந்தமானில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்ப்பு!
அந்தமான் அருகே அடுத்தடுத்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் அந்தமான் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதும் அந்த வகையில் இன்று காலை முதல் திடீர் திடீர் என ஐந்து முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
காலை 11 மணி, பிற்பகல் 1.55, 2.06, 2.37 மற்றும் 3.02 ஆகிய மணிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது
அந்தமான் அருகே நடுக்கடலில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது