1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Amazon Lays Off 250 Employees in Devices Unit Amid AI Shift

கிண்டில் பிரிவில் கை வைத்த அமேசான்... 250 ஊழியர்களின் வேலை காலி...

Amazon Layoffs
டெக் உலகின் ஜாம்பவானான அமேசான் நிறுவனம், தனது கிண்டில் மற்றும் எக்கோ தயாரிப்புகளை கவனிக்கும் சாதனங்கள் பிரிவில் மீண்டும் ஒரு ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் சுமார் 250 ஊழியர்களின் வேலைகள் பறிபோயுள்ளன. குறிப்பாக மென்பொருள் மேம்பாட்டுப் பிரிவில் உள்ள ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நள்ளிரவு அல்லது அதிகாலை நேர மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் இந்தத் துயரச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பை மறுஆய்வு செய்த பின்னரே இந்தச் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் துணைத் தலைவர் செரி ராபின்சன் தெரிவித்துள்ளார்.
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துவதே இந்த வேலைநீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே அமேசான் தனது சில்லறை வர்த்தகப் பிரிவில் 1,000 பேரை வேலைநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தற்போதைய காலகட்டத்தில் மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் டிராப்பாக்ஸ் போன்ற பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருவது டெக் உலகைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அமேசானின் இந்த திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
வாடா வாடா சண்டைக்கு வாடா!... சண்டை போட கட்டணம் வசூலிக்கும் சீன நபர்...