1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. algeria disconnected all the relationship with uae

ஐக்கிய அமீரகத்துடன் உறவு துண்டிப்பு!.. கோபத்தில் பொங்கிய அல்ஜீரியா!...

algerai uae
உலகெங்கும் பல தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.. அந்த தீவிரவாத இயக்கத்திற்கு பல நாடுகளும் உதவி புரிந்தும் வருகின்றன. இதை காரணமாக சொல்லித்தான் அமெரிக்கா பல நாடுகளின் மீதும் போர் தொடுத்து வருகிறது. ஈரான் மீது போர் தொடுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

தீவிரவாதத்திற்கு துணை புரியும் நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. பாகிஸ்தானில் பல தீவிரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அல்ஜீரியா அரசு அறிவித்திருக்கிறது. அல்ஜீரியாவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட Kabylie - MAK பிரிவினைவாத இயக்கத்திற்கு ஐக்கிய அமீரகம் ஆதரவளிப்பதாக அல்ஜீரியா அரசு சொல்கிறது. அமீரக நாட்டு விமானங்கள் அல்ஜீரியாவின் வான்வெளியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு!.. போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை!.. தமிழக அரசு பதில்!..