1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (22:48 IST)

பெருவில் ஓடும் விமானத்தில் தீ விபத்து...2 பேர் பலி

peru
தென் அமெரிக்க நாடான பெருவின் விமானத்தில் தீப் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவின் தலை நகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில், ஏற்பஸ் ஏ-320 விமானம் புறப்பட்டது. அதில், 102 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்புவதற்காக வேகமக சென்றபோது, அருகே இருந்த தீயணைப்பு வாகனம் மீது திடீரென்று மோதியது.

இதில், விமானத்தின் பின்புறப் பகுதியில் தீப்பிடித்தது.உடனே விமானத்தை நிறுத்தை விமானிகள் முயற்சி செய்தனர்.

தீயணைப்பு வீரர்களும் அந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதி;ல், 2 வீரர்கள் பலியாகினர். ஆனால், பயணிகள் யாருக்கும் காயம் அஎற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து,அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj