1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (08:09 IST)

பயணிகளுக்கு ரூ.984 கோடி திருப்பி குடுங்க! – ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவு!

airlines
கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான கட்டணத்தை திரும்ப அளிக்காத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை சமீபத்தில் டாடா குழுமம் வாங்கியது. அதற்கு முன்னதாக ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வந்தபோது கொரோனா காலத்தில் அமெரிக்காவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பொதுவாக விமானம் ரத்து செய்யப்பட்டால் அதற்கான டிக்கெட் புக்கிங் கட்டணத்தை உடனடியாக பயணிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் ஏர் இந்தியா இந்த விதிமுறையை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க போக்குவரத்து துறை அளித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களை பரிசீலனை செய்ய காலதாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் இந்தியா ரூ.984 கோடியும், கட்டணத்தை திருப்பி அளிக்க தாமதம் செய்ததற்காக ரூ.11.24 கோடியும் செலுத்த வேண்டும் என அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Edit By Prasanth.K