வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (20:28 IST)

தைவான் அருகே போர் விமானங்களை நிறுத்திய சீனா!

தைவான் அருகே சீனா போர் விமானங்களை  நிறுத்தி வைத்துள்ளதாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது.

சீனாவின் ஒரு பகுதியாகக இருந்த தைவான் கடந்த 1949 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டது என்றாலும், இன்னும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக  சீனா கருதி வருகிறது.

அதனால், இரு நாடுகளிடையே அவ்வப்போது மோதல் எழுந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க பெண் எம்பி ஒருவர் அங்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில்,தைவான் நாட்டில் அருகே சீனா தங்களின் 10  போர் விமானங்களை நிறுத்தி வைத்து அங்கிருந்து பறந்துவருகிறது. அதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றம் நிலவுகிறது.

இதுகுறித்து தைவான் சீனா மீது குற்றம்சாட்டியுள்ளது.

Edited by Sinoj