1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (21:13 IST)

நானோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய ஜிம்பாவே

zimbave
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சிறிய நாடான ஜிம்பாவே முதன்முறையாக ஒரு  நானோ செயற்கைக்கோளை விண்ணைல் ஏவியுள்ளது.

ஜிம்பாவே நாடு பொதுவாக கிரிக்கெட் விளையாடுதான் அறிந்திருப்போம். ஆனால், இந்த   நாடு பலதுறையில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறது.

ஜிம்பாவேயில் அதிபர் எம்மர்சன் மனாகவா தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த அரசு அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டது. இதனுடன்ம் ஜிம்சாட் -1 என்ற ஜிம்பாவேயின் நானோ செயற்கைக் கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் செயற்கைக் கோள் ஏவியது குறித்து, ஜிம்பாவே அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நானோ செயற்கைக்கோள்,   நாட்டின் விவசாயம் மேம்படுத்துவதற்காகவும், பேரிடர்கள் பற்றி கங்காணிப்பதற்கும், நாட்டிலுள்ள கனிம வளங்கள் பற்றி அறிவதற்கும் இது உதவும் என்று தெரிவித்துள்ளது.

Edited by Sinoj