அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள ஒரு கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் ஓஹியா மாகாணத்தில் உள்ள கிளப்பில், மர்ம ந்பர் ஒருவர் அங்கிருந்தவர்களை திடீரென சுடத்தொடங்கினார். இந்த தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். உடனே போலீஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கு முன் டெக்ஸாஸில் உள்ள வால்மார்ட் ஷாப்பிங்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியானார்கள், இந்நிலையில் அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.