திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (09:06 IST)

வால்மார்ட் கடைக்குள் புகுந்து சரமாரியாக சுட்ட மர்ம நபர்: 20 பேர் பலி

அமெரிக்காவில் மர்ம நபர்கள் அவ்வப்போது திடீர் திடீரென துப்பாக்கி சூடு நடத்துவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் இன்று அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வால்மாட் கடையில் ஒரு மர்ம இளைஞர் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்  கடை ஒன்றில் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு மர்ம நபர் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக, கண்மூடித்தனமாக, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்டான். இந்தத் துப்பாக்கி சூட்டால் சம்பவ இடத்திலேயே 20 பேரும் உயிரிழந்தனர். சூடு நடத்திய 21 வயது இளைஞனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான சீருடைகள் வாங்க வந்தவர்கள் என்பது பரிதாபத்திற்குரிய ஒரு தகவல். துப்பாக்கி சூடு குறித்த தகவல் அறிந்த போலீசார் அதிரடியாக வால்மார்ட் கடைக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்திய இளைஞனை கைது செய்து இழுத்து சென்றனர் 
 
இந்த சம்பவம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்ததோடு இதுவொரு மிகவும் மோசமான சம்பவம் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்