செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (13:34 IST)

ஒவ்வொரு நாளும் மோசமாகவே விடிந்தது – மனம்திறந்த கோஹ்லி !

உலகக்கோப்பை அரையிறுதியில் இருந்து வெளியேறிய பின் ஒவ்வொரு நாளும் மோசமாகவே விடிந்தது எனக் கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரானக் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :-

இந்தத் தொடர் ரிஷப் பண்ட்டுக்கு சிறந்த வாய்ப்பு. ரிஷப் பந்த் தன்னுடைய அனைத்து திறமைகளையும், கட்டற்ற வகையில், வெளிப்படுத்த இது சரியான வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன். உலகக்கோப்பை தோல்வியைப் பற்றி கூற வேண்டுமானால், நாங்கள் தோல்வி அடைந்து வெளியேறியது மிகவும் கடினமாக இருந்தது. அதன் பின் ஒவ்வொரு நாளுமே எங்களுக்கு மோசமாகவே விடிந்தது. உலகக் கோப்பையில் நடந்த விஷயங்களில் இருந்து மீண்டு இப்போது நன்றாக இருக்கிறோம். மீண்டும் விளையாட ஆர்வமாக இருக்கிறோம்.