1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (09:01 IST)

கோஹினூர் வைரம் இனி யாருக்கு சொந்தம்?? – எலிசபெத் ராணி மரணத்தால் ஏற்பட்ட கேள்வி!

Priness Crown
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரிடம் இருந்த கோஹினூர் வைரம் பதித்த க்ரீடம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் அரிய பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரம் 1850ல் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அரிய வகை வைரமான இது ஆண் அரசர்களுக்கு கெடுதல்களை விளைவிக்கும் சக்தி கொண்டது என நம்பப்பட்டதால் பெண்ணரசிகள் அணியும்படி மகாராணியின் கிரீடத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டது.


கடந்த 70 ஆண்டுகாலமாக ராணி எலிசபெத் கிரீடத்தை அலங்கரித்த இந்த கோஹினூர் வைரம் அடுத்து அரசராகும் சார்லஸின் மனைவி கமிலாவை சென்றடையும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பல ஆண்டுகளாக இந்தியாவின் சொத்தான கோஹினூர் வைரத்தை இந்தியாவிற்கே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.