1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (21:04 IST)

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துடன் லிஸ் டிரஸ் சந்திப்பு: பதவியேற்பு எப்போது?

liz tress
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துடன் லிஸ் டிரஸ் சந்திப்பு: பதவியேற்பு எப்போது?
இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ் அவர்கள் சற்று முன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 
 இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி விலகிய நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது 
இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் ஆகியோர் போட்டியிட்டனர் 
 
நேற்று ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டிரஸ் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் தனது ராஜினாமா கடிதத்தை இரண்டாம் எலிசபெத் ராணியுடன் வழங்கிய நிலையில் அந்த ராஜினாமா கடிதத்தை ராணி ஏற்றுக்கொண்டார் 
 
இந்த நிலையில் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் லிஸ் டிரஸ் சற்று முன்னர் பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து ராணியை சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறப்படுகிறது