திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (08:20 IST)

இங்கிலாந்து ராணி மறைவு: இங்கிலாது VS தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி ரத்து

eng vs sa
இங்கிலாந்து ராணி மறைவு: இங்கிலாது VS தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி ரத்து
இங்கிலாந்து ராணி மறைவு காரணமாக இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியிருந்தது. நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்த நிலையில் மழை குறுக்கிட்டது 
 
இதன் காரணமாக ஒரு பந்து வீச படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்கள் காலமான நிலையில் இன்றைய 2-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது 
 
நாளை 3வது நாள் மழை தொடராமல் இருந்தால் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.