1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (08:45 IST)

லைகா சுபாஷ்கரனோடு அஜித்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித் சமீபத்தில் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பினார்.

அஜித்தின் 61வது படத்தை ஹெச் வினோத் மும்முரமாக இயக்கி வருகிறார். இந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்பில் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பா முழுவதும் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்தார். பல நாடுகளில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் ஐரோப்பா பயணத்தை அஜித் முடித்து வந்த அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் அஜித் லண்டனுக்கு சென்ற போது அங்கு லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது அதை உறுதிப் படுத்தும் விதமாக அஜித் மற்றும் லைகா சுபாஷ்கரன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.