1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (17:24 IST)

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரானார் லிஸ் ட்ரஸ்!

liz truss
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரானார் லிஸ் ட்ரஸ்!
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆகிய இருவர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது
 
இருவரும் தங்கள் ஆதரவாளர்களிடம் வாக்குகளை சேகரித்து நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி யார் பிரதமர் என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அந்தவகையில் மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோருக்கு அடுத்ததாக பிரிட்டன் நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் ட்ரஸ் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது