பூஜையின் போது விளையாடிய சிறுவனை அடித்தே கொன்ற புத்த பிட்சு
தாய்லாந்தியில் பூஜையின் போது விளையாடிய சிறுவனை புத்த பிட்சு ஒருவர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து பாங்காங் அருகே காஞ்சனாபுரியில் புத்தபிட்சு மடம் உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்த மடத்தின் புத்த பிட்சு சுபாசை சுதியானோ (64) பிரார்த்தனை நடத்தினார்.
அப்போது அங்கு பயிற்சி பெற்று வந்த 9 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனின் குறும்புத் தனம் பிரார்த்தனைக்கு இடையூறாக இருந்தது.
இதனால் கடும் கோபமடைந்த அந்த புத்த பிட்சு, பிரார்த்தனை முடிந்த பிறகு சிறுவனை சரமாரியாக அடித்து துவைத்தார். இதனால் சிறுவன் வலியால் அலறித் துடித்தான்.
ஆனாலும் ஆத்திரம் தீராத புத்த பிட்சு சிறுவனை பல முறை எட்டி உதைத்தார். அங்கிருந்த தூணில் சிறுவனின் தலையை மோத வைத்தார். இதனால் சிறுவன் கோமா நிலைக்கு சென்றான். உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீஸார் அந்த புத்து பிட்சுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.