செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (08:15 IST)

நடுக்காட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாமாக இருந்த மனைவி - போட்டுத்தள்ளிய கணவன்

தூத்துக்குடியில் மனைவி கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்ததைக் கண்ட கணவன், அவரது மனைவியையும் கள்ளக்காதலனையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது மனைவி தங்கமாரியம்மாள். தங்கமாரியம்மாளுக்கு வேணுகோபால் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. ஹரி வேறு வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வார்.
 
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவரது மனைவி தங்கமாரியம்மாள், கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்துள்ளார். இதனைப்பற்றி கேள்விபட்ட ஹரி தனது மனைவியையும், வேணுகோபாலையும் கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத அவர்கள் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். 
இந்நிலையில் தங்கமாரியம்மாளும், வேணுகோபாலும் காட்டுப் பகுதியில் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த ஹரி, கடும் கோபமடைந்து தனது மனைவி  தங்கமாரியம்மாளையும், அவரது கள்ளக்காதலன் ஹரியையும் வெட்டி சாய்த்தார். இதில் அவர்கள் இருவருமே உயிரிழந்தனர்.
 
இதனையடுத்து ஹரி கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.