அமெரிக்காவில் சீக்கியரை கொலை செய்தவர் கைது
அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீக்கியர் டெர்லோக் சிங் என்பவரை படுகொலை செய்த குற்றத்திற்காக ராபர்ட்டோ உபெய்ரா என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சீக்கியர் ஒருவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இந்நிலையில் அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த சீக்கியரான டெரியோக் சிங் என்பவரை அவரது கடையின் வைத்தி சில மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து விசாரித்து வந்த போலீஸார், இந்த படுகொலையை செய்த நெவார்க்கை சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா(55) என்பவனை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவனிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.